வாழ்க்கையில் துன்பம் நேரும்போது முதலில் அனைவரும் பிரச்சனையை ஆராய்ந்து சரியான தீர்வை கண்டுபிடிக்கவே முயல்வோம். இதில் பிரச்சனைகளில் கவனத்தை செலுத்துவது, தீர்வுகளில் கவனம் செலுத்துவது என இரண்டு வகை உள்ளது. ஆனால் இவை இரண்டிற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இதற்கான உதாரணத்தைப் பாருங்கள் :
ஜப்பானிய அழகு சாதனத் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த சம்பவம் இது. வாடிக்கையாளர் ஒருவர், தான் வாங்கிய சோப்பு பெட்டியில் சோப்பு இல்லாமல், காலியான பெட்டி மட்டுமே இருந்ததாக நிறுவனத்திற்கு புகார் செய்தார்.
அது நிறுவனத்தின் அசெம்பிளி லைனில் தோன்றிய பிரச்சனை என்பதை கண்டுபிடித்தனர் அதிகாரிகள். அங்கிருந்துதான் சோப்பு பெட்டிகள் சிப்பமிடப்பட்டு டெலிவரிக்கு அனுப்பி வைக்கப்படும். ஏதோ ஒரு தவறால் காலிப் பெட்டி போய்ச் சேர்ந்துவிட்டது.
நிர்வாகம் பொறியாளர்களை அணுகி பிரச்சனையை தீர்க்கச் சொல்லி கேட்டது. அவர்கள் 'எக்ஸ்-ரே' மிஷின் ஒன்றை கடுமையாக உழைத்து வடிவமைத்தனர். அதன் மானிட்டர்களை கவனிக்க இரண்டு பணியாளர்களையும் நியமித்தனர்.
இதே பிரச்சனை ஒரு சிறிய நிறுவனத்தில் ஏற்பட்ட போது அவர்கள் வேறுவித தீர்வை கண்டுபிடித்தனர். அந்த நிறுவன தலைவர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய 'ராட்சத மின்விசிறி' ஒன்றை வாங்கி அசெம்பிளி லைனில் பொருத்தினார். சோப்பு பெட்டி வரிசையில் நகரும் போது மின்விசிறி வேகமாக சுற்றும். வெற்றுப் பெட்டி இருந்தால் அது வரிசையில் இருந்து தூக்கி வீசப்படும்.
பிரச்சனைக்கு தீர்வு காணும் போது நடைமுறையில் சாத்தியம் உள்ள எளிய தீர்வைக் கண்டுபிடியுங்கள். எப்போதும் பிரச்சனையில் கவனத்தை செலுத்தாமல் தீர்வுகளைக் கவனியுங்கள். பிரச்சனை எவ்வளவு சிக்கலாக இருந்தாலும் தீர்வுகள் எளிதாய் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.