எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 10 டிசம்பர், 2021

💧 கலந்த 🥛

 👨🏽 பால்காரரிடம் 🐃 ஒன்றும் நான்கு 🐄 இருந்தன. அவருடைய கிராமத்திலும், சுற்றி உள்ள சிறு சிறு கிராமங்களிலும் 🥛 விற்று வந்தார். தினமும் 🌄 எழுந்து ⛺ சுத்தம் செய்வார். 🐄 குடிப்பதற்குத் 💧, சாப்பிட 🌾 வைப்பார். 🥛 கறந்தவுடன் 🏺 எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் 🏘 சென்று கொடுப்பார். 👨🏽 மனைவி 👩🏽 தன் கணவனுக்கு உதவி செய்வாள்.

🥛 💧 கலக்காமல் நேர்மையுடன் விற்றுவந்தார் 👨🏽. அதனால் கிராமத்து மக்கள் 👨🏽 🥛 வாங்குவதையே விரும்பினார்கள். 🥛 விற்று சம்பாதித்து 👨🏽👩🏽, இரு 👶🏻 குடும்பத்தை 😊 நடத்தி வந்தார்கள். ஒரு நாள் பக்கத்து ஊரில் 🥛 ஊற்றிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது 🧔🏻 சந்தித்தார் 👨🏽.

🧔🏻 🥛 ஊற்றுபவர்தான். அவர் பக்கத்து ஊரில் இருக்கிறார். 🥛 💧 கலக்காமல் விற்கமாட்டார். அதனால் மக்கள் 🧔🏻 ஊற்றும் 🥛 விரும்பவில்லை. 👨🏽 🥛 பற்றி கேள்விபட்டவர்கள், 🧔🏻 🥛 நிறுத்திவிட்டு, 👨🏽 🥛 வாங்கத் தொடங்கினார்கள். 🧔🏻 இதனால் 👨🏽 மேல் பொறாமை. எப்படியாவது 👨🏽 வியாபாரத்தைக் கெடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டு இருந்தார். ஆனால் 👨🏽 தன்மேல் 🧔🏻 கொண்டுள்ள 👿 பற்றி எதுவுமே தெரியாது.

‘‘என்ன 👨🏽 சௌக்கியமா?’’ என்று நலம் விசாரித்து பேசத் தொடங்கினார் 🧔🏻. ‘‘என்ன 👨🏽, பிழைக்கத் தெரியாதவனா இருக்கிறாயே! உன் இடத்தில் நான் இருந்தால் என்ன செய்வேன் தெரியுமா?’’ என்று பீடிகை போட்டார் 🧔🏻. 

‘‘என்ன 🧔🏻 சொல்றீங்க? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே....’’ யதேச்சையாகக் கேட்டார் 👨🏽.

‘‘👨🏽, உனக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது. உன் 👶🏻 வளர்ந்துகிட்டிருக்காங்க. அவங்களுக்கு செலவே இனிமேலதான். கையில நாலு 💰 இருந்தாத்தான் நல்லது. 🥛 கொஞ்சம் 💧 கலந்து ஊத்தினாலும் வாங்கறவங்க வாங்கிகிட்டு தான் இருப்பாங்க. கொஞ்சமா 💧 கலந்தா ஒண்ணுமே தெரியாது. நான் சரிக்கு சரி 💧 கலந்துதான் ஊத்தறேன். என்கிட்ட வாங்காமலா இருக்காங்க? அதனால புத்தியோட பொழச்சுக்கப்பா’’ என சொல்லிவிட்டு 👨🏽 முகத்தைப் பார்த்தார் 🧔🏻.

‘‘சரிண்ணா, நீங்க சொன்னபடி செய்யறேன்’’என்ற 👨🏽 தன் வழியே நடந்தார். 👨🏽 மனதில் 👿 புகுந்தது. ‘🧔🏻 சொல்வதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. 👶🏻 வளர்ந்து கொண்டு இருக்கிறாங்க. இனிமேல் எல்லாமே செலவுதான். ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்து வைத்தால்தானே நாமும் நிம்மதியாக இருக்க முடியும்’ நினைத்துக்கொண்டே 👨🏽 🏠 வந்து சேர்ந்தார்.

அடுத்தநாள் 💧 கலந்த 🥛🏺 சுமந்துகொண்டு அடுத்த கிராமத்துக்குப் புறப்பட்டார். மனதுக்குள் 🤯 புகுந்து  இருந்தது. பழைய 💪 இல்லை.  திடீரென்று தலையில் யாரோ தட்டுவதுபோல இருந்தது. 🏺 சரியாகத் தாங்கிப் பிடிக்க 🖐 எடுப்பதற்குள்,  🏺 விழுந்து 🥛 சிந்திவிட்டது.

மேலே ஒரு 🦅 பறந்து கொண்டிருந்தது. ‘உன்னை என்ன செய்கிறேன் பார்’, என்று கோபமான 👨🏽, எறிவதற்கு கல்லை எடுத்தார்.அதற்குள் 🦅 பறந்துவிட்டது. வேறு வழியின்றி 🏠 வந்த 👨🏽 அன்று மனசே சரியில்லை. ‘இனிமேல் 💧 கலப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இப்படியெல்லாம் இழப்பு வந்தால், எப்படித்தான் சரிகட்டுவது? இதுவரை இப்படி ஆனதே இல்லை’ என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருந்தார். 

அடுத்த நாளும் அதே போல 💧 கலந்த பாலை எடுத்துக் கொண்டு அதே வழியில் சென்றார். எச்சரிக்கையாக 🏺 பிடித்துக்கொண்டே வந்தார். வழியிலிருந்த அதே 🌲 தாண்டிச் செல்வதற்குள், 🦅 தலைக்கு மேலே பறந்து வரத் தொடங்கியது. 🦅 கண்டதும் 👨🏽 கால்கள் நின்றன.

‘ஏ 🦅, ஏன் இப்படிச் செய்யறே? என் பிழைப்பையே கெடுக்கறியே’, 👨🏽 👄 முணுமுணுத்தன. மீண்டும் 🦅 🏺 நோக்கிப் பறந்து வந்தது. ‘‘💰 ஆசை வந்துடுச்சு இல்லையா? இவ்வளவு நாள் இல்லாமல், இப்ப இப்படி 💧 கலந்து விற்பது ❌ இல்லையா? அநியாயமா சேர்க்கும் 💰 தங்காதுன்னு தெரியாதா?’ ‘🦅 குரல் கேட்டது. 

‘ஐயோ.. நான் எவ்வளவு பெரிய ❌ செஞ்சுட்டேன். இவ்வளவு நாள் இல்லாத 💰 ஆசை என்னைக் குழியில தள்ளிடுச்சு’ 🧔🏻 என் வியாபாரத்தைக் கெடுத்து நாசம் பண்ண பார்த்திருக்கிறாரே, நல்ல வேளை, கடவுளே 🦅 வழியா நமக்கு அறிவுரை வழங்கிட்டாரு’ என்று மனம் தெளிவாகி, மீண்டும் பழையபடி 💧 கலக்காத 🥛 எடுத்துக் கொண்டு நடந்த 👨🏽 தலைக்கு மேலே நிழல் கொடுத்து 🦅 பறந்து வந்தது!

நேர்வழியில் செல்பவர்களுக்குத் தெய்வம் துணை நிற்கும் என்பது உண்மை!!

வியாழன், 9 டிசம்பர், 2021

🐰 கற்ற பாடம்

 🐰 சின்னுவுக்குப் பசி தாங்கமுடியவில்லை. "என்ன இப்படிப் பசிக்குது? பசி தாங்க முடியலே! அம்மா..." என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டது.

அம்மா 🐇, 🐰 பாவமாகப் பார்த்தது. "🐰 கிளம்பு... இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தால், சாப்பிட ஒண்ணும் கிடைக்காது. 🏞 🌿 நிறைய இருக்கும். இஷ்டத்துக்கும் சாப்பிடலாம். போகலாம், வா..." என்றது அம்மா 🐇. 

"🏞 ரொம்ப தூரமாச்சே?" என்றது 🐰. "ரொம்ப தூரம்தான்... இங்கே 🌿 எல்லாம் காய்ஞ்சு கிடக்குது. நாம 🏞 போறதைத் தவிர, வேற வழி இல்லே..." என 🐇 சொன்னதும், "சரிம்மா, போகலாம்..." என்று 🐰 சின்னு அரைமனதாகச் சொல்லிக்கொண்டு புறப்படத் தயாரானது.

அம்மா 🐇 🐰 இருவரும் 🏞 நெருங்கி விட்டன. 🏞 பார்த்த 🐰 😱 போய்விட்டது. "என்னம்மா இது... இங்கே நிறைய 🌿 இருக்கும்னு சொன்னே! வெறும் 🏜 இருக்கு...' 🐰 😔 சொன்னது.

"இக்கரையில பார்க்காதே... அக்கரையில பாரு!" என்றது அம்மா 🐇. அக்கரையைப் பார்த்த 🐰 👀 😮 விரிந்தன. "ஆ... எவ்வளவு 🌿? இவ்வளவு 🌿 நான் பார்த்ததே இல்லே!" என்றது 🐰.

"🐰... 🏞 தாண்டிப் போகலாம், வா..." 🐇 சொன்னதும், "என்னது?" என்று 🐰 😨. "ஏன் 🐰... என்னாச்சு?" என 🐇 கேட்டது. 

"இவ்வளவு பெரிய 🏞 எப்படித் தாண்டிப் போக முடியும்?" 🐰 🏞 ஒரு பார்வை பார்த்துவிட்டுப் 😤 விட்டது.

அக்கரையில் ஏராளமான 🌿 வளர்ந்திருந்தன. "🐰, இது சின்ன 🏞... உன்னால சுலபமா தாண்ட முடியும்! வா, தாண்டிப் போவோம்..." அம்மா 🐇 தாண்டுவதற்குத் தயாரானது. 

🐰, "என்னால தாண்ட முடியாதும்மா... வா, திரும்பிப் போயிடலாம்!" என்றது. அம்மா 🐇, 🐰 பார்த்தது. "என்ன 🐰 இப்படிச் சொல்றே? இங்கே பார்... உன்னால ஆத்தைத் தாண்ட முடியும்! வீணா 😨, மனசைப் போட்டுக் குழப்பிக்காத... இந்த 🏞 தாண்ட முடியும்னு நம்பு... உன்னால தாண்ட முடியும்!" என ஊக்குவித்தது.

🐰, சலசலத்து ஓடும் 🏞 பார்த்தது. 🏞 அகலம் பத்து அடி இருக்கும். "என்னால முடியாதும்மா..." என்று 🐰 வேகமாகத் தலையசைத்து மறுத்தது.

"சரி 🐰... இப்ப நான் 🏞 தாண்டிக் காட்டறேன். அதே மாதிரி நீயும் தாண்டு..." என்று சொல்லிவிட்டு, அம்மா 🐇 சர்ரென்று 🏞 தாண்டியது. அம்மா 🐇 அக்கரையில் நின்றுகொண்டு 🐰 பார்த்தது. "இப்படித்தான் 🐰... நீயும் 🏞 தாண்டி வா!" என்றது. "என்னால முடியாதும்மா! என்னை விட்டுடு..." என்று சொல்லிவிட்டு, 🐰 கொஞ்சம் பின்னால் நகர்ந்தது. 

அம்மா 🐇 கொஞ்சம் யோசித்தது. 🐰, அம்மாவை 😕 பார்த்துக் கொண்டிருந்தது.

திடீரென்று அம்மா 🐇 முகம் மாறியது. "🐰... ☠️..." என்று அலறியது. "என்னம்மா?" 🐰 😥 கேட்டது. "உனக்குப் பின்னால... 🐯 ஒண்ணு வந்துட்டு இருக்குது!" "என்னது..! 🐯?" என்றபடி கண்ணிமைக்கும் நேரத்தில்  சரக்கென்று ஒரே 🤸‍♂️! 🏞 தாண்டிய வேகத்தில், 🐰 வேகமாக 🏃‍♀️ தொடங்கியது.

"🐰... ஏய் 🐰, ✋... ✋..." என்று 🗣 🐇  🐰 பின்னால் 🏃‍♀️. 🐰 திரும்பிப் பார்க்காமல் 🏃‍♀️. "ஏய் 🐰... 🐯 இல்லே... 🐭 இல்லே... நான் சும்மாத்தான் சொன்னேன்!" என்று அம்மா 🐇 கத்தியது. ஓடிக்கொண்டிருந்த 🐰 படக்கென்று நின்றது. தயக்கத்தோடு திரும்பிப் பார்த்தது.

🐯 இல்லே! "ஏம்மா 🐯 வருதுனு சொன்னே?" எனக் கேட்டது. "🐰... நீ 🏞 தாண்டிட்டே! ஹே..." என்றது. "ஆமா! நான் 🏞 தாண்டிட்டேன்!" 🐰  😁 எழுந்து நின்று கத்தியது. 

"பார்த்தியா 🐰... உன்னால 🏞 தாண்ட முடியாதுனு நீயா நினைச்சுப் 😨, உன்னால 🏞 தாண்ட முடியலே... ஆனா, உன் உயிருக்கு ஒரு ☠️ வந்தபோது, உன்னைக் காப்பாத்திக்க முயற்சி பண்ணி, இந்த 🏞 சுலபமா தாண்டிட்ட... முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும்! என்றது அம்மா 🐇.


ஞாயிறு, 5 டிசம்பர், 2021

👨🏻 ஆசை

ஒருநாள் 🧚‍♀️ ஒரு கழுதையை படைத்து விட்டு, அதனிடம் “நீ ஒரு கழுதை. 🌄 முதல் 🌅 வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் 📦 இருக்கும். நீ 🌿 தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்"

இதற்கு கழுதை சொன்னது : “நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்.”

 🧚‍♀️ கழுதையின் ஆசையை நிறைவேற்றியது. 

அடுத்து ஒரு 🐶 படைத்து அதனிடம்,

 “நீ 👨🏻 🏡 காக்கும் காவலன். 👨🏻 அன்பு தோழனாக இருப்பாய். 👨🏻 உண்ட பிறகு உனக்கு 🍚 கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்.”

இதற்கு 🐶 கூறியது : “🧚‍♀️, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்”

 🧚‍♀️ நாயின் ஆசையை நிறைவேற்றியது.

அடுத்து 🧚‍♀️ 🐒 படைத்து அதனிடம்,

“நீ ஒரு 🐒. 🌲 🌴 தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்.”

இதற்கு 🐒 கூறியது : “20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்”

 🧚‍♀️ 🐒 ஆசையை நிறைவேற்றியது.

கடைசியாக 👨🏻 படைத்து அவனிடம் சொன்னார் ” நீ ஒரு 👨🏻. உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற 🐎🐄🐕🐒 ஆட்சி செய்வாய். 🌏 உன் 🖐. நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்.”

இதற்கு 👨🏻 கூறினான் : “20 வருஷம் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், 🐕 வேண்டாம் என்ற 15 வருடங்களையும், 🐒 வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு” 

🧚‍♀️ 👨🏻 ஆசையை நிறைவேற்றியது.

அன்று முதல்

👨🏻 20 வருடங்களை 👨🏻 வாழ்கிறான்.

💑 செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் 📦 தாங்கி கொண்டு, 🌅 🌄 உழைக்கிறான்.

👫 வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் 🏡 🐶 இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். 

அடுத்த 10 வருடங்கள் வயதாகிய பிறகு 🐒 போல் 👦🏻 வீட்டிலிருந்து 👧🏼 வீட்டிற்கும், 👧🏼 வீட்டிலிருந்து 👦🏻 வீட்டிற்கும் தாவி, தன் பேர 👶🏻 வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்.

 

வெள்ளி, 3 டிசம்பர், 2021

🦊 ஏமாற்றிய 🐓

 காட்டில் உள்ள 🌲 மேல் 🐓 ஒன்று வாழ்ந்து வந்தது. அது காட்டு 🐓 என்பதால் உடல் கொழுத்துத் திரிந்தது. நல்ல 💪 இருந்தது. அது, "கொக்கரக்கோ' என்று 🗣 காடே அதிரும்.

அது இருந்த 🌲 வழியாக தினந்தோறும் 🦊 ஒன்று செல்லும். "எப்படியாவது இந்தக் கொழுத்த 🐓 பிடித்து, ஒருநாள் உணவாக்கிக் கொள்ள வேண்டும்,'' என்று 🤔 ஆசையுடன் 🐓 பார்க்கும். 🐓 🦊 பார்வை புரிந்தது. அதனால் தனக்கு என்றேனும் ஆபத்து நேரிடலாம் என்று கருதி அது எச்சரிக்கையுடன் இருந்தது.

🐓 அந்த 🌲 விட்டு இறங்காத காரணத்தினால், தன் எண்ணத்தை ஈடேற்ற முடியாமல் தவித்துப் போயிற்று 🦊.

இந்தச் 🐓 தந்திரத்தால்தான் தனக்கு விருந்தாக்கிக் கொள்ள வேண்டும் என்று🦊 தீர்மானித்தது. ஆகவே, ஒருநாள் 🦊 அவ்வழியே வரும்போது அது 🌲 கீழ் அமர்ந்து 🐓 பேச ஆரம்பித்தது.

"அழகிய 🐓! உனக்கு விஷயமே தெரியாதா? இன்று நம்முடைய 🦁 ஒரு உத்தரவு போட்டிருக்கிறார். இன்று முதல் ஒரு வருடத்துக்கு யாரும், யாருக்கும் 🤜🤛 கிடையாது. இது சமாதான ஆண்டு. எந்த விலங்குக்கும், மற்ற விலங்கால் பிரச்னை வரக் கூடாது. பிரச்னை வந்தால் கடும் தண்டனை தரப்படும்.

எனவே, எதிரிகளாக இருந்த விலங்குகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விட்டன. அவை 🏞 பகுதியில் 🌛 வெளிச்சத்தில் பாட்டுப் பாடி ஆடிக் கொண்டிருக்கின்றன. எல்லா விலங்குகளும் ஆளுக்கு ஒன்றை ஜோடி சேர்த்துக் கொண்டன. எனக்குத்தான் யாரும் இல்லை என்று நினைத்தபோது, நீ என் 🤔 வந்தாய். வா, நாம்✌பேரும்  சேர்ந்து போய் மற்ற விலங்குகளுடன் சேர்ந்து ஜாலியாக இருக்கலாம்'' என்றது.

🦊 பேசப் பேச 🐓 அதைப் பற்றிச் சிறிதும் கவனிக்காமல் வேறு ஒரு உயர்ந்த 🌲 சென்று தலையை இங்குமங்குமாக ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த 🦊 😡 இருந்தது. "நான் எவ்வளவு இனிய செய்தியைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ என்னவென்றால் 🌲 மேலே சென்று எதையோ வேடிக்கைப் பார்க்கிறாயே'' என்றது.

"🦊, நீங்கள் சொன்னதைக் கேட்டேன். ஆனால், அதைவிட முக்கியமான சமாசாரத்தை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன்'' என்றது.

"அதை விட முக்கியமானதா? அது என்ன?'' என்றது 🦊.

"வெகு தூரத்தில் ✌ 👤 ஓடி வந்து கொண்டிருக்கின்றன!'' என்றது 🐓.

"அவை எப்படி இருக்கின்றன?'' என்று பயத்துடன் கேட்டது 🦊.

"✌ 👅 தொங்க விட்டிருக்கின்றன. அதன் 👁 பளபளவென 💥. அங்கும், இங்கும் பார்த்து எதையோ 👃 முகர்கின்றன. அதற்கு நான்கு 👣 இருக்கின்றன. உங்களை விட உயரமாக இருக்கின்றன. ஆ... இப்போது கூர்மையான கோரைப் பற்களும் தெரிகின்றன'' என்றது 🐓.

"அவை வேட்டை 🐕. பார்த்தால் கடித்துக் குதறி விடும்'' என்று கூறியவாறு 🏃‍♀️ 🦊.

அதை பார்த்து 🐓 😂.


🐓 சில தகவல்கள் :

அஸ்தமனத்திற்கு பிறகு 🐓 பாட ஆரம்பித்தால், வானிலை மாறக்கூடும் என்று அர்த்தம் 

🐓 தரையில் தோண்டும்போது, ​​🌪 பலப்படுத்தக்கூடிய திசையில் தங்கள் மார்பகங்களைத் திருப்புகின்றன.

5 முதல் 10 ஆண்டுகள் வரை 🐓 வாழ்கின்றன.

வியாழன், 2 டிசம்பர், 2021

🐴-🐌 பந்தயம்

ஒருநாள் 🏞 பகுதியில ஒரு 🐴 நடந்து போய்கிட்டு இருந்தது. அப்ப அந்த 🛣 ஒரு 🐌 ஊர்ந்து போய்கிட்டு இருக்குறத பார்த்தது.

திமிர்பிடிச்ச அந்த 🐴 “ஏய் 🐌... ஏன் இப்படி மெதுவா 🚶‍♀️? என்ன மாதிரி வேகமா 🏃‍♀️" சொன்னது.

🐴 திமிர் பேச்ச கேட்ட அந்த 🐌 "இது என்னோட இயல்பு. நீ உன்னோட வேலைய பாரு"ன்னு சொல்லிட்டு மெதுவா 🚶‍♀️ ஆரம்பிச்சுச்சு.

🐌 பாத்து தொடர்ந்து கேலி செஞ்சுக்கிட்டே இருந்துச்சு அந்த 🐴. 😡 அந்த 🐌 திமிர் பிடிச்ச 🐴 பாடம் புகட்டணும்னு நினச்சது. உடனே, "நீ அவ்வளவு பெரிய 💪 என்கூட போட்டிக்கு வர்றியா?"ன்னு கேட்டது.

"நான் எவ்வளவு வேகமா 🏃‍♀️ தெரியுமா? மெதுவா 🚶‍♀️ உன்னால என்ன ஜெயிக்க முடிஞ்சா ஜெயிச்சுக்கோ. நாளைக்கு 🌄 இதே இடத்துல போட்டி வச்சுக்கலாம்"னு அந்த 🐴 சொன்னது.

தன்னோட நண்பர்கள் கிட்ட வந்து அந்த 🐌 நடந்த விஷயத்தை சொல்லுச்சு. "நண்பர்களே... நீங்க எனக்கு உதவி செஞ்சீங்கன்னா அந்த திமிர்பிடித்த 🐴 ஒரு பாடம் புகட்டலாம்"னு சொல்லி, தன்னோட திட்டத்த சொல்லியது.

அந்த திட்டத்த கேட்ட எல்லா 🐌🐌🐌 உதவுறதுக்கு ஒத்துக்கிடுச்சுங்க. மறுநாள் 🐴 வர்றதுக்கு முன்னாடியே மைதானத்துக்கு வந்த 🐌🐌🐌 எல்லாம் ஓடுற 🛣 எல்லாத்துலயும் ஒவ்வொரு 🐌 ஒளிஞ்சு கிடுச்சுங்க. 🐴 வந்ததும் போட்டி ஆரம்பமானது.

💪 அந்த 🐴 வேகமா 🏃‍♀️ ஆரம்பிச்சது. கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா இருந்த 🌲 ஒளிஞ்சுக்கிட்டு இருந்த இன்னொரு 🐌 ஓடுற 🛣 வந்தது.

இது தான் தன்னோட போட்டி போடுற 🐌 🐴 நம்ப வைக்க 🏃‍♀️ மாதிரி நடிச்சது. "😱!!! இது என்ன நான் இவ்வளவு வேகமா 🏃‍♀️ வந்தும் இந்த 🐌 எனக்கு முன்னாடி 🏃‍♀️ இருக்கேன்"னு நினைச்சுட்டு தொடர்ந்து 🏃‍♀️ ஆரம்பிச்சது அந்த 🐴. 

கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா இன்னொரு 🐌 🌲 பின்னாடி இருந்து ஓடுற 🛣 வந்து 🏃‍♀️ ஆரம்பிச்சது. இதை பார்த்த 🐴 🤔 இருந்தாலும் தான் தோத்துக்கிட்டு இருக்கோம்ன்ற நினைப்பு வந்தது. உடனே வேகமா 🏃‍♀️ ஆரம்பிச்சுச்சு. 

கடைசியா ஒரு 🐌 🌳 நடுவில இருந்து வந்து போட்டி முடியிற இடத்துக்கு வந்தது. 🐴 அந்த எல்லை கோட்டை தாண்டுறதுக்கு முன்னாடி அந்த 🐌 எல்லை கோட்டை தாண்டிடுச்சு.

'இது எல்லாத்தையும் உண்மைன்னு நம்புனா அந்த 🐴, 🐌 தன்ன தோக்கடிச்சுடுச்சதா நம்பிருச்சு. தன்னோட அறிவில்லாத திமிர்பிடிச்ச குணத்தால 🐌 கிட்ட போட்டி போட்டு தோத்துட்டமே'ன்னு நினச்சு 😭. உடனே அந்த 🐌 மன்னிப்பு கேட்டது.

புதன், 1 டிசம்பர், 2021

🤜🤛 போட்ட 🐏

 ஒரு ⛰️. அதன் அருகே அழகிய 🏞 ஓடிக் கொண்டிருந்தது. அதனால் ⛰️ பச்சைப் பசேல் என்று 🌱 வளர்ந்திருந்தது.

⛰️ மேலே அங்கங்கே காணப்படும் சமபரப்புப் பகுதியில் சின்னஞ்சிறு 🏡 இருந்தன. அங்கு வாழும் 👨‍👩‍👧👨‍👩‍👧‍👦 தங்களது பிழைப்புக்காக 🐐, 🐄 இன்னும் பிற 🐔🐓 வளர்த்து வந்தனர். அதிலிருந்து வரும் 💰 கொண்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

அவர்கள் வளர்க்கும் 🐐 எல்லாம்  ⛰️ வளர்ந்துள்ள 🌱 தின்ன அங்கே மேய வரும். 🐄 சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை.

அங்கே ஒரு முரட்டு 🐏 இருந்தது. உடல் பருத்து, கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அதைப் பார்த்து மற்ற 🐐 பயந்து ஒதுங்கிப் போய்விடும். அதனால் அந்த முரட்டு 🐏 திமிர் வந்து விட்டது.

அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு 🐐 வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும். ஒரு நாள் 🏞 கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த 🐐 ஒன்று  🐊 பார்த்து விட்டு 😰 தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது. 😨 ஓடி வந்த அந்த 🐐 முரட்டு 🐏 மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது.

அதைப் பார்த்த முரட்டு 🐏 ஓடி வந்த 🐐 பார்த்து, “நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம்?” என்று 😡 கேட்டது.

அதற்கு அந்த 🐐, “அங்கே 🐊 பார்த்தேன். அதனால் வேகமாக 🏃‍♀️ வந்து விட்டேன்” என்று சொன்னது.

முரட்டு 🐏 அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த 🐐 🤜🤛 போட ஆரம்பித்தது. அந்த 🐐 சண்டைப் போட விரும்பாமல் சமாதானமாகவே பேசியது. முரட்டு 🐏 அது சொன்னதைக் கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த 🐐 முரட்டு 🐏 எதிர்த்து நின்று ஆக்ரோஷமாக சண்டையிட்டது.

⛰️ சரிவான பகுதியில் 🐏🐐 சண்டையிட்டுக் கொண்டிருக்கும்பொழுது முரட்டு 🐏 கால் சறுக்கி ⛰️ உருண்டு போய் 🏞 விழுந்தது.

🏞 கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த 🐊 அந்த முரட்டு 🐏 கவ்விக் கொண்டு 🏞 சென்று விட்டது.


செவ்வாய், 30 நவம்பர், 2021

👶 சாப்பிட்ட 🍒

 👩🏻 ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த 🍒 பழங்களை வாங்கினாள். 👩🏻 நான்கு 👶. கோபு 🧒🏻,பாபு 🧒,சிட்டு👶🏼, பட்டு 👶 என்று அவர்களுக்குப் பெயர். 👬👭 🍛 சாப்பிட்ட பிறகு 🍒 தரலாம் என்று 👩🏻 நினைத்தாள்.

🍒 மேஜைமீது ஒரு 🍽 இருந்தன. 👶 இதுவரை 🍒 பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. 🤤 அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை 👶 மிகவும் பிடித்திருந்தது. 🍒 தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை  உண்டாயிற்று.

அறையில் யாருமில்லாதபோது ஒரு 🍒 எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு 👩🏻 பழங்களை எண்ணிப் பார்த்தாள். ☝️ குறைந்தது.

“டியர் 👬👭,☝️ 🍒 பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?” என்று 👭👬 பார்த்துக் கேட்டாள்.

“நான் இல்லை”, “நான் இல்லை” என்று எல்லோரும் சொன்னார்கள். 👶 அவர்களோடு சேர்ந்து “நான் தின்னவில்லை” என்று சொன்னாள்.

“சரி……..யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், 🍒 பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக 🍒 🌴 முளைத்துவிடும். அதுதான் எனக்குப் 😨 இருக்கிறது” என்றாள் 👩🏻.

👶 பயந்துபோய், “இல்லை, நான் கொட்டையை 🚪 வெளியே எறிந்துவிட்டேன்” என்று கூறி 😭.

“பொய் சொன்னால் எப்படி மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது…” என்று 👶 சமாதானப்படுத்தினாள் 👩🏻.

திங்கள், 29 நவம்பர், 2021

🐎 ஏமாற்றிய 🐺

 அது ஒரு அடர்ந்த 🏞. அந்த 🏞 வசித்து வந்த 🐺, 🐎 சேர்ந்து ஒரு 📜 செய்து கொண்டன. அதாவது நாள்தோறும் ✌ பேரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், ✌ பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த 📜 மூலம் 🤝 செய்து கொண்டன.

ஒருநாள் 🐺, தன் நண்பனான 🐎 இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக 🐎 இருப்பிடத்தை நோக்கிச் அந்த அடர்ந்த 🏞 வழியே சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், 🦁 ஒன்று அந்த 🐺 வழி மறித்தது. 🦁 கண்டு அந்த 🐺 நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என 🤔.

🐺 உடனே 🦁 நோக்கி, "🤴! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, 🐎 ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் 🐎, இரண்டு மூன்று 📆 உங்கள் உணவுக்கு ஆகும்!" என்று கூறிற்று.

அந்த ஏற்பாட்டுக்கு 🦁 ஒப்புக் கொண்டது. 🐺, 🦁 ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு 🐎 இருப்பிடத்திற்குச் சென்றது.

"நண்பனே! இரை தேடச் செல்லலாமா?'' என, 🐎 அழைத்துக்கொண்டு 🦁 மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.

🐎, 🦁 மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது 🐺. 🦁, 🐎 மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு 🦁, 🐺 மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.

🐺 பதறிப் போய், "🤴! எனக்குப் பதிலாகத் தானே 🐎 காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!'' என்று நரி 😨 கேட்டது.

"நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக 💪 வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம்? ஆகவே, உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது'' என்று கூறிக் கொண்டே 🦁, 🐺 கொன்று வீழ்த்தியது.

நீதி: கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு 👿 தான் ஏற்படும்.

ஞாயிறு, 28 நவம்பர், 2021

👨🏻 கொடுத்த 🥚

  ஒரு நாள் 👨🏻, இரண்டு 🍲 சமைத்து மேஜை மேல் வைத்தார். ஒரு 🍲 மேலே ஒரு 🥚. அடுத்த 🍲 மேலே 🥚 இல்லை.

👨🏻 👦 "உனக்கு இந்த ✌ எது வேண்டுமோ எடுத்துக் கொள்" என்றார். 👦 🥚 இருந்த 🍲 எடுத்துக் கொண்டேன். என்னுடைய புத்திசாலித் தனமான முடிவுக்காக என்னை நானே 👏 கொண்டேன்.

👨🏻 சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு 😱. அவருடைய 🍲 அடியில் 🥚🥚. அவசரப்பட்டு 👦 எடுத்த முடிவுக்காக வருத்தப் பட்டேன். 👨🏻 மென்மையாகச் 🙂 சொன்னார். "ஒன்றை நினைவில் வைத்துக் கொள். உன் 👀 பார்ப்பது உண்மை இல்லாமல் போகலாம்".

அடுத்த நாளும் ✌ பெரிய 🍲 சமைத்துச் சாப்பாட்டு மேசையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு 🍲 ஒரு 🥚 இருந்தது. இன்னும் ஒன்றில் இல்லை. அப்பா என்னிடம், "உனக்கு இந்த ✌ எது வேண்டுமோ... நீயே எடுத்துக் கொள்"

இந்த முறை 👦 கொஞ்சம் புத்திசாலித் தனமாக 🤔. 🥚 வைக்கப் படாத 🍲 எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு 😱. 🍲 அடி வரை துழாவிப் பார்த்தும் ஒரு 🥚 கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா 🙂 சொன்னார்.

"எப்போதும் அனுபவங்களின் அடிப்படையில் எதையும் நம்பக் கூடாது. ஏன் என்றால் சில ⏰ வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்".

மூன்றாவது நாள். மறுபடியும் 🍲 சமைத்து மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு 🍲 🥚. மற்றொன்றில் இல்லை.

👨🏻 மீண்டும் `நீயே தேர்ந்து எடுத்துக் கொள்’ என்றார். இந்த முறை அவசரப்பட்டு 🍲 எடுக்காமல் பொறுமையாக அவரிடம் சொன்னேன்.

`👨🏻 நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் 👨‍👩‍👦‍👦 உழைக்கிறீர்கள். எனவே முதலில் நீங்கள் 🍲 எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்’ என்றேன். அவர் 🥚 இருந்த 🍲 எடுத்துக் கொண்டார். 👦 🥚 இல்லாத 🍲 சாப்பிட ஆரம்பித்தேன்.

அன்றைக்கும் எனக்கு 😱. என் 🍲 அடியில் 🥚🥚 இருந்தன. 👨🏻 என்னைப் பார்த்துச் சொன்னார்.

"நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போது எல்லாம் உனக்கும் நல்லதே நடக்கும்!"


 நீதி : அடுத்தவர்களுக்கு நல்லது நினையுங்கள். உங்களுக்கும் நல்லதே நடக்கும்!!!

சனி, 27 நவம்பர், 2021

பறவையா?? விலங்கா??

 ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது. ‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள்.

விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது. ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன.

பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன. வவ்வாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது. ‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன.


சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது. ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டால் பறவைகளைக் காட்டைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள். அதற்கு முன்பாக நாம் விலங்குகளுடன் சேர்ந்துகொண்டுவிட வேண்டும் என்று வவ்வால் யோசித்தது.

உடனே விலங்குகளின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளும்படி கேட்டது. ‘நீ ஒரு பறவை. உன்னை சேர்த்துக்கொள்ள முடியாது!’ என்றன விலங்குகள்.

‘இல்லை! சிறகுகள் இருந்தாலும் நான் பறவை இனமில்லை. குட்டி போட்டு பால் தருவதால் நானும் விலங்கினமே..’ என்றது வவ்வால். விலங்குகளும் வவ்வாலை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டன. உடனே வவ்வால் சொன்னது: ‘பறவைகளின் பலவீனம் பசி. தானியத்தைக் காட்டி பறவைகளை எளிதாகப் பிடித்துவிடலாம். பறவைகள் குடிக்கும் நீரில் விஷத்தைக் கலந்துவிட்டால் அவற்றை மொத்தமாகக் கொன்றுவிடலாம்!’

இதைக் கேட்ட விலங்குகள் ஆரவாரம் செய்தன. சண்டை தொடர்ந்தது. திடீரென பறவைகள் பக்கம் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது. உடனே வவ்வால் பறவைகளிடம் வந்து சேர்ந்தது.

‘சகோதரா! நான் குட்டிப் போட்டு பாலூட்டினாலும் நான் விலங்கினமில்லை. நான் உங்களைப் போல பறப்பவன். விலங்குகள் என்னை மிரட்டியதால் இதுவரையில் அவர்கள் பக்கம் இருந்தேன்!’ என்றது.

இப்போது வவ்வாலைப் பறவைகள் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டன. ‘விலங்குகள் நெருப்புக்கு பயந்தவை. காட்டுக்கு தீ வைத்துவிட்டால் விலங்குகள் மொத்தமாக அழிந்துவிடும். மிருகங்களுக்கு அறிவு கிடையாது. பறவைகள்தான் புத்திசாலிகள்..’ என்றது வவ்வால். அதைக் கேட்டு பறவைகள் மகிழ்ச்சியில் சிறகடித்தன. சண்டை தொடர்ந்தது. 

முடிவில் கடவுள் தலையிடவே சமாதானம் ஏற்பட்டது. ‘காடு அனைவருக்கும் சொந்தமானது. மின்மினிப் பூச்சிகள் அழிந்துபோனால்கூட காடு அழியத் தொடங்கி விடும். காட்டில் எவரும் பெரியவரும் இல்லை; எவரும் சிறியவரும் இல்லை’ என கடவுள் அறிவித்தார். அதன்படி பறவைகளும் விலங்குகளும் இணைந்து வாழ்வதற்கு சம்மதித்தன.

பறவைகளும் விலங்குகளும் ஒன்றுகூடி கடவுளிடம் தெரிவித்தன: ‘சுயநலத்தோடு இனத்தை காட்டிக் கொடுத்த வவ்வாலுக்கு இனி காட்டில் இடம் தரமுடியாது. இடிந்த கட்டிடங்களில் இருட்டில் தலைகீழாகத் தொங்கி வாழட்டும்!’

அதைக் கேட்ட கடவுள் சொன்னார்: ‘துரோகிக்கு இதுதான் சரியான தண்டனை!’ விலங்குகளும் பறவைகளும் ஒன்றுசேர்ந்து வவ்வாலைக் காட்டை விட்டு வெளியே துரத்தின.


கடவுள் துரோகிகளை ஒருபோதும் மன்னிப்பதில்லை. அத்துடன் துரோகத்துக்குத் துணை போனவர்களையும் அடையாளம் காட்ட மறப்பதில்லை என்பதை வலியுறுத்தும் பர்மீய மக்களின் நாட்டுப்புறக் கதை இது.



🤴 கட்டிய 🕍

 ஒரு 🤴 தன் நாட்டில் மிகப் பெரிய 🕍 ஒன்றைக் கட்டினான். அதன் கோபுரத்தை 🎖 வேய்ந்தான். அத்தகைய சிறப்புமிக்க 🕍 கும்பாபிஷேகம் செய்ய 📆 குறிக்கப்பட்டது.

🤴 ஒரு ஆசை எழுந்தது. ‘இத்தனை பெரிய 🎖 வேய்ந்த 🕍 வெறும் 💧 ஊற்றியா குடமுழுக்கு செய்வது?’ எனவே முழுக்க முழுக்க 🥛 ஊற்றிக் குடமுழுக்கு செய்யலாம்' என்று எண்ணினான்.

உடனே நாடு முழுவதும் 🥁 போடச் செய்தான்: “🤴 கட்டியுள்ள 🕍 குடமுழுக்கு செய்வதற்கு நிறைய 🥛 தேவை, நாட்டு மக்கள் அனைவரும் 👨‍👩‍👦‍👦 ஒரு 🥛 கொண்டு வந்து தர வேண்டும்…”

மக்கள் 🥛 கொண்டு வந்து கொட்டுவதற்காக 🏛 வாயில்முன் இரண்டு பெரிய ⚱️வைக்கப்பட்டன. அவற்றைக் காவல் காக்க 🤺, 🥛 கொடுப்போரைக் கணக்கெடுக்க அரசு அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர்.

⚱️ உயரமாக இருந்ததால் மக்கள் அவற்றுள் பாலை ஊற்ற இரண்டு 🧗‍♂️ அமைக்கப்பட்டிருந்தன.

மக்களும் அரசனது ஆணையை ஏற்று 👨‍👩‍👦‍👦 வந்து ⚱️ ஊற்றிச் சென்றனர். அரசு அலுவலர்கள் அவ்வாறு ஊற்றுவோரின் பெயரை ✍️ கொண்டனர்.

சோமு என்ற 👦 சிந்தித்தான், ‘அனைவரும் 🥛 கொட்டுகின்றனர். நான் சொம்பில் 💧 கொண்டு போய்க் கொட்டினால் என்ன? ⚱️ நிறைய 🥛 ஒரு சொம்பு 💧 கலந்தால் தெரிந்துவிடுமா என்ன? ⚱️ உயரமாக இருக்கிறது. காவல் புரியும் 🤺 தரையில்தான் நிற்கின்றனர். நான் ஊற்றுகிறேன் என்று 🔊 வைத்துத் தெரிந்துகொள்வார்களே அன்றி, 🥛 ஊற்றுகின்றேனா 💧 ஊற்றுகின்றேனா என்று எப்படித் தெரியும்?’

இவ்வாறு எண்ணி அவன் ஒரு சொம்பில் 💧 கொண்டு சென்று ஊற்றிவிட்டு வந்தான்.

குடமுழுக்கிற்காகக் குறித்த 📅 வேள்வி முதலிய சடங்குகளையெல்லாம் முடித்துக்கொண்டு கோபுரங்களில் ஊற்ற ⚱️ இருக்கும் 🥛 கொண்டு வரும்படி 🤴 ஆணையிட்டான்.

🤺 கொண்டு வந்த ⚱️ ஒரு குடத்தைவிட்டு மொண்ட போது அதில் கலப்படமில்லாத தூய 💧 இருந்தது! ஆம். இரண்டு ⚱️ முழுக்க முழுக்க 💧 இருந்தது!

நாட்டு மக்கள் அனைவரும் சோமுவைப் போலவே எண்ணிவிட்டிருந்தனர். ’அனைவரும் 🥛 ஊற்றப் போகின்றனர், நான் மட்டும் 💧 ஊற்றினால் என்ன ஆகிவிடப் போகிறது’ என்று அனைவரும் 💧 ஊற்றியிருந்தனர்!

நீதி: ஒவ்வொரு தனி 👨 சேர்ந்தே மிகப் பெரிய சமுதாயம் உருவாகிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் கடமையை சரியாக செய்தால் மட்டும் 🇮🇳 நாட்டில் முன்னேற்றம் ஏற்படும்.

வெள்ளி, 26 நவம்பர், 2021

🧖‍♂️ வளர்த்த 🐶

  🧖‍♂️ ஒருவர் பயங்கரமான ஒரு காட்டில் வாழ்ந்துவந்தார். அவரோடு ஒரு 🐕 மிகுந்த ❤ இருந்தது. முனிவர் தான் உண்ட 🥕, 🍊 போக மிச்சத்தை அந்த 🐶 அளிப்பார். அதுவும் அதை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தது. 🧖‍♂️ இருந்ததால் அதற்கு 🥩 உண்ணும் ஆசை வரவில்லை.

ஒரு நாள் திடீரென ஒரு 🐆 அந்த 🐕 கண்டு அதை வேட்டையாட துரத்தியது. 🐆 கண்டு மிகுந்த 😨 கொண்ட அந்த 🐕 முனிவரிடம் வந்து தஞ்சம் அடைந்து. நடந்தவை அனைத்தையும் அறிந்த 🧖‍♂️, "பயப்படவேண்டாம். நீ என்னுடைய 👶 மாதிரி உனக்கு எந்த ஆபத்தும் நேராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறி ஒரு மந்திரத்தை ஜபித்து தன் 🏺 உள்ள 💧 அந்த 🐕 மீது தெளித்தார். உடனே அந்த 🐕 ஒரு மிக பெரிய 🐆 மாறியது. உடனே அது தன்னை விரட்டி வந்த 🐆 விரட்டி அடித்தது.

🐆 மாறினாலும் அந்த 🐕 விசுவாசத்தோடு 🧖‍♂️ காலையே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தது. ஒரு நாள் திடீரென ஒரு 🐅 பயங்கர பசியோடு அந்த 🐆 துரத்த ஆரமித்தது. மீண்டும் என்ன செய்வதென்று தெரியாமல் 🧖‍♂️ வந்து சரணடைந்தது அந்த 🐆. உடனே அவர் மீண்டும் மந்திரத்தை ஜபித்து💧 அந்த 🐆 மீது தெளித்தார். உடனே அது பலம் பொருந்திய 🐅 மாறியது. பின் தன்னை துரத்தி வந்த 🐅 ஓட ஓட விரட்டியது.

ஆனால் இப்போது 🐅 பழைய மாதிரி 🍅 🍎 எல்லாம் உண்பது கிடையாது. 🧖‍♂️ தெரியாமல் அவ்வப்போது வேட்டைக்கு சென்று 🦒, 🐇 என எது கிடைக்கிறதோ அதை வேட்டையாடி உண்டு வந்தது. இப்படியே 📆 செல்ல ஒரு நாள் மிக பெரிய 🐘 ஒன்று அந்த 🐅 துரத்தியது. மீண்டும் அந்த 🐅 🧖‍♂️ தஞ்சம் அடைய அவர் அதை ஒரு பலம் பொருந்திய 🦁 மாற்றினார்.

காட்டிலே இது தான் 💪 பொருந்திய 🦁 என்பதால் காட்டிற்கு 🤴 என்ற கர்வத்தோடு திரிந்தது. அதோடு 🧖‍♂️ எப்போவாவது ஒருமுறை தான் வந்து பார்த்தது. மற்ற 🕰 தனக்கு பிடித்த 🦒 வேட்டையாடி கொன்று உண்டு கொண்டிருந்தது. அப்போது திடீரெனெ ஒருநாள் அந்த காட்டிற்கு வினோதமான 🦕 ஒன்று வந்தது. அந்த 🦁 விட மிக 💪 இருந்தது. அது இந்த 🦁 துரத்த ஆரமிக்க மீண்டும் அந்த 🦁 🧖‍♂️ தஞ்சம் அடைந்தது.

🧖‍♂️ மீண்டும் மந்திரத்தை ஜபித்து அந்த 🦁 சக்திவாய்ந்த 🦕 மாற்றினார். அந்த 🦕 இப்போது காட்டில் எதையுமே விட்டு வைக்காமல் அனைத்தையும் கொன்று தின்றுகொண்டிருந்தது. இந்த 🦕 வரும் 🔊 கேட்டாலே மற்ற மிருகங்கள் ஓடி ஒலிந்தன. இதற்கு 😈 தலைக்கேறியது. "நம்மை கண்டு இந்த காட்டில் அனைவருமே 🤯 நடுங்குகின்றனர். ஆனால் இந்த 🧖‍♂️ மட்டும் எப்போதும் நம்மை கண்டு 🤯 இல்லை. ஆகையால் அவரை கொல்ல வேண்டும்" என்று அந்த 🦕 தீர்மானித்தது.

ஒருநாள் 🧖‍♂️ கொல்வதற்காக அந்த 🦕 பாய்ந்து வந்தது. 🦕 நோக்கத்தை நன்கு அறிந்த முனிவர் மீண்டும் மந்திரத்தை ஜபித்து அதை ஒரு 🐕 மாற்றிவிட்டார்.


நீதி: 🌄 நமக்கு கொடுத்ததை வைத்து நாம் அதை பயனுள்ளதாக மாற்றவேண்டுமே தவிர அதை வைத்து எதையும் ☠️ நினைக்க கூடாது. 

வியாழன், 25 நவம்பர், 2021

🐇-🐌-🐢 கதை

  ஒரு காட்டில் 🐢, 🐌 நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக 🚶‍♀️, தாவிக் குதித்து 🏃‍♀️ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது.

ஒருநாள், அவை ✌ நடந்து சென்றுகொண்டிருந்த போது, ஓர் அழகிய வெள்ளை நிற 🐇 தாவிக் குதித்து, 🏃‍♀️ வருதைக் கண்டன.

"🐇 ✋!'' என்றது 🐢.

"நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்?'' என்று கேட்டது 🐌.

"இது என்ன ❓ உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்!'' என்று சொல்லி விட்டு, 🐇 அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது

"ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா?''

"ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக 🏃‍♀️. வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா... அனுபவித்துப் பாருங்கள்!'' என்றது 🐇.

🐌, 🐢 அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது.

அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென 🌳 மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.🐢, 🐌 ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன.

சட்டென, 🌳 மறைவிலிருந்து ஓரு 🐺 வெளிப்பட்டு, 🐇 நோக்கிப் பாய்ந்தது. 🐢, 🐌, விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன. 🐺 🐇 பிடித்தது.

சிறிது 🕰 சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த 🐢, 🐌 இரண்டும் 🐇 ரத்தத்தைப் பார்த்து, 🤯 போயின

தாங்கள் வேகமாய் 🏃‍♀️ விட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை 🙏 கூறின.


நீதி : நம்மிடம் இருப்பதை கொண்டு 😄 வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் 

புதன், 24 நவம்பர், 2021

🐍 பழிவாங்கிய 🐦

  ஒரு ஊரில் 🐦 தம்பதியினர் மிகுந்த ♥️ வாழ்ந்து வந்தனர். அவர்கள் பல 🥚 இட்டு அதனை பாதுகாத்து வந்தனர். அப்போது அந்த 🐦 வாழும் 🌲 கீழ் உள்ள பொந்தில் உள்ள 🐍 ஒன்று  🐦 இடும் 🥚 யாரும் அறியாமல் எடுத்து தன்னுடைய பசியை ஆற்றிக் கொண்டிருந்தது.

இதனால் மனம் வருந்திய 🐦 அங்கு வந்த 🐺 இது பற்றி கூறி புலம்பியது. 🐍 பசியில் இருந்து  🥚 தப்பிக்க வைக்க 🐺 ஒரு 💡 கூறியது.

மறுநாள் 🌅 பொழுதில் 🏰 பறந்தது 🐦. அங்கே 👸 தன்னுடைய 📿💍 கழற்றி வைத்து விட்டு குளித்து கொண்டிருந்தாள். அழகான 💎 பதித்த 💍 ஒன்றை தூக்கி கொண்டு பறந்தது.

👸 அலறி வீரர்களை அழைத்து 🐦 பின் தொடர சொன்னாள். 🐦 அந்த 💍 எடுத்துச் சென்று 🐍 இருந்த பொந்தில்  போட்டு விட்டு வேறொரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டது.

வீரர்கள் 💍 எடுக்க பொந்திற்குள் கைவிட்டபோது அங்கிருந்த 🐍 சீறியது. 🐍 கண்ட வீரர்கள் அதனை தங்கள் 🔪 வெட்டி கொன்றனர். அதன் பின்னர் 💍 எடுத்து சென்று 👸 ஒப்படைத்தனர்.

🐺 யோசனைப்படி செய்த 🐦, 🐍 தொல்லையில் இருந்து விடுபட்டு தன்னுடைய 👨‍👩‍👦‍👦 பல்லாண்டு காலம் 😀 வாழ்ந்தது.


நீதி : பிறருக்கு ☠️ செய்ய நினைப்பவருக்கு அதைப்போல பலமடங்கு ☠️ திரும்ப அவர்களையே வந்துசேரும்.

செவ்வாய், 23 நவம்பர், 2021

உண்மையான அழகு

அக்பர் சக்கரவர்த்திக்கு, அவரது பேரன் குர்ரத்திடம் அளவற்ற பாசம். அவனைக் கொஞ்சும் போது, அரச காரியங்களைக் கூட மறந்து விடுவார். ஒருநாள் அரசவையில், "என் பேரன் குர்ரத்தை விட, அழகான குழந்தை வேறு எங்காவது உண்டா?" என்று கேட்டார். அங்கிருந்தவர்கள், "இல்லை அரசே…" என்றனர்.

ஆனால், பீர்பல் மட்டும் பதில் கூற வில்லை. இதை கவனித்த அக்பர், "நீ ஏன், பதில் அளிக்கவில்லை?" என்று பீர்பாலிடம் கேட்டார்.

"அரசே… உங்கள் கேள்வி மிகவும் சிக்கலானது. உண்மையான
அழகை எப்படிக் கண்டு பிடிப்பது?"

"ஏன்... பார்த்தால் தெரியாதா? ஆந்தை அவலட்சணமாக இருக்கிறது. மான் அழகாக இருக்கிறது. இது கூடத் தெரியாதா?"

"அரசே… நாளைய தினம் ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வரச் சொல்வோம். அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்…" என்றார் முல்லா.

"நீங்கள் சொல்வதும் உண்மை தான்; நாளை குழந்தைகளுக்கு அழகுப் போட்டி நடத்துவோம். ஆளுக்கொரு குழந்தையை எடுத்து வாருங்கள். அதிலிருந்து, அழகிய குழந்தை ஒன்றைத் தேர்ந்தெடுப்போம்…" என்றார், அக்பர்.


மறுநாள் அரசவை கூடியது. அரச பிரதிநிதிகள், ஆளுக்கொரு குழந்தையை
எடுத்து வந்திருந்தனர். அக்பர் சக்கரவர்த்தி எல்லா குழந்தைகளையும் பார்த்தபடியே வந்தார். எதுவுமே, அழகாக தோன்றவில்லை. அவருடைய பேரன் மட்டும் தான் அழகு என தோன்றியது.

வெறுங்கையுடன் நின்ற பீர்பாலைப் பார்த்து, "நீ அழகிய குழந்தை எதையும் எடுத்து வரவில்லையா?" என்று கேட்டார்.

"அரசே… நாட்டிலேயே அதிக அழகுள்ள குழந்தையை பார்த்தேன். அதை அரண்மனைக்குக் கூட்டிச் செல்வதாக, தாயாரிடம் கேட்ட போது, ‘மற்றவர் கண் திருஷ்டி பட்டுவிடும்’ என்று கூறி, மறுத்து
விட்டாள்…" என்றார்.

"அப்படியானால் மாறுவேடம் அணிந்து, அக்குழந்தையை பார்க்கச் செல்வோம்" என்றார் அக்பர்.

அரசருடன், அரசவை பிரதானிகளும், மாறுவேடம் அணிந்து சென்றனர். நகரத்தை விட்டு வெகுதுாரம் அழைத்து வந்தார் பீர்பால். ஒரு குடிசைப் பகுதியை அடைந்தனர்.

"என்ன பீர்பால், நீ சொன்ன அழகான குழந்தை, இந்த அவலட்சணமான
இடத்தில் தான் இருக்கிறதா?" என்று, கேட்டார் அக்பர்.

"சேற்றில் கூட செந்தாமரை பூக்கும். குப்பையில், மாணிக்கமும் இருக்கும். ஒருவேளை, பீர்பால் சொன்ன அழகுக் குழந்தையும், இங்கு இருக்கலாம்…" என்றார் ஒரு அமைச்சர். "அதோ பாருங்கள்… ஒரு குழந்தை விளையாடுகிறதே…" என்று,
துாரத்தில் ஒரு குழந்தையைக் காட்டினார், பீர்பால்.

மிக விகாரமாக ஒரு குழந்தை, புழுதியில்
விளையாடுவதை அக்பரும், மற்றவர்களும் பார்த்தனர். அப்போது, அக்குழந்தை தரையில் தடுக்கி விழுந்து, ‘ஓ…’ என, அழ ஆரம்பித்தது.



உடனே குடிசையில் இருந்து வெளியே வந்த பெண், "என் தங்கக்கட்டி, அழகு செல்லமே… இந்த குப்பை தொட்டி உன்னைத் தள்ளி விட்டதா… அதை அடிப்போம். நீ அழாதே… என் ராஜா…" என, குழந்தையை சமாதானப்படுத்தினாள்.

இதைக் கேட்ட அக்பர், "இவளுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? எவ்வளவு அசிங்கமாக, அவலட்சணமாக குழந்தை இருக்கிறது. இதைப் போய், அழகு என்கிறாளே…" என்றார்.

"யாரு ஐயா நீ? என் அழகு செல்வத்தை, இன்னொரு முறை அசிங்கம்ன்னு சொன்னா நாக்கை அறுத்து விடுவேன். இந்த உலகம் முழுவதும் தேடிப் பார்! என் குழந்தை மாதிரி,
அழகான ஒன்றை பார்க்க முடியாது…" என்று பொரிந்து தள்ளினாள், அக்குழந்தையின் தாய்.

மறுமொழி பேசாமல் திரும்பிய அக்பர் வழியில், "பீர்பால்! நீ கூறியது உண்மை தான். ஒவ்வொரு குழந்தையும், அதன்
பெற்றோருக்கு அழகு தான்…" என்றார்.

"பெற்றோருக்கு மட்டுமல்ல, பாட்டனார்களுக்கும்…" என்றார் பீர்பால்,
ஒரு நக்கல் சிரிப்புடன். அதன் பொருள் உணர்ந்து, சிரித்தார் பாட்டனார் அக்பர்!

அழகு என்பது, நம் பார்வை சார்ந்தது. புற அழகு மட்டும் அழகல்ல. மனதால் யாருக்கும் தீமை விளைவிக்காமல், நல்லதை மட்டுமே எண்ணும் அக அழகே முக்கியமானது. 




திங்கள், 15 நவம்பர், 2021

புத்தரின் போதனை

புத்தர் தன்னுடைய கருத்துக்களை உலகம் முழுவதும் பரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கூடியது. ஒரு சிலர் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலர், அவரது கருத்தை ஏற்காததுடன் ஏளனமாக, அவமரியாதையாக பேசவும் செய்தனர். ஆனால் அவற்றை எல்லாம் ஒரு சிறிய புன்னகையுடன் கடந்து சென்றுவிடுவார், புத்தர்.

ஒருநாள் அவர் ஒரு ஊருக்குச் சென்றிருந்தார். அங்கு தன்னுடைய கருத்துக்களை மக்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபன், புத்தரை கடுமையான வார்த்தைகளால் திட்டினான். சாதாரணமான ஒருவன் அந்த வார்த்தைகளைக் கேட்டால், அங்கு அசம்பாவித சம்பவங்கள்தான் நிகழும். ஆனால் எதிரில் இருப்பவர் புத்தர் ஆயிற்றே.. அவரது முகத்தில் புன்னகையைத் தவிர வேறு எந்த முகபாவனையும் தென்படவில்லை.



புன்னகையோடே தன்னைத் திட்டிய வாலிபரை, தன் அருகில் வரும்படி அழைத்தார், புத்தர். ‘இவர் நம்மை என்ன செய்துவிடப்போகிறார்’ என்று நினைத்த அந்த வாலிபனும் புத்தரின் அருகில் போய் நின்றான்.

அவனை தன் பக்கத்தில் அமரும்படி சொன்னார் புத்தர். பின்னர் அவனிடம், “நண்பரே.. நீங்கள் உங்களுக்கு நெருக்கமானவரைப் பார்க்கச் செல்லும்போது, கையில் ஏதாவது எடுத்துச் செல்வீர்களா?” என்று கேட்டார்.

அதற்கு அந்த வாலிபன், “ஆமாம்.. பழங்கள் ஏதாவது வாங்கிக்கொண்டு செல்வேன்” என்று பதிலளித்தான்.

“அப்படி நீங்கள் வாங்கிச் செல்லும் பழங்களை, நீங்கள் காணச்சென்றவர் உங்களிடம் இருந்து வாங்கிக்கொள்ளவில்லை என்றால், அந்தப் பழங்களை என்ன செய்வீர்கள்?” என்றார், புத்தர்.

“நான் வாங்கிச் சென்ற பழங்களை, என்னுடனே எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்துவிடுவேன்” என்றான், அந்த வாலிபன்.

அப்போது புத்தர் அதே புன்னகையுடன் கூறினார். “அதைத்தான் இப்போது நீங்கள் செய்யப்போகிறீர்கள். திட்டுவது என்பது உங்கள் சுதந்திரம். அதை ஏற்பதும், ஏற்காததும் என்னுடைய சுதந்திரம். நீங்கள் என்னை அவமதித்துப் பேசிய பேச்சுக்களை நான் ஏற்கவில்லை. எனவே பழங்களை திரும்ப எடுத்துச் செல்வதுபோல, உங்களுடைய வசைபாடலையும் உங்களுடனேயே திரும்ப எடுத்துச் செல்லுங்கள்” என்றார்.

அதைக்கேட்ட அந்த வாலிபன் வெட்கித் தலைகுனிந்தான். தன் தவறை உணர்ந்து, உடனடியாக புத்தரின் பாதத்தை வணங்கி, மன்னிப்புக் கேட்டான். பின்னாளில் அவன் புத்தரின் கொள்கைகளை பின்பற்றும் சீடனாகவும் மாறிப்போனான்.

இன்பங்களைப் போலவே துன்பங்களும் வாழ்வில் உண்டாகும். ஆனால் இன்பங்களை மகிழ்வாக வரவேற்கும் நமக்கு, துன்பங்களை ஏற்கும் மனப்பக்குவம் இருப்பதில்லை. ஒரு சிலர் வாழ்க்கையில் ஏராளமான அவமானங் களை சந்திக்கவே செய்வார்கள். அது அவர்களின் மனதை மிகவும் பாதித்து விடுகிறது. அதனால் நிலைகுலைந்து, வாழ்வையே இழந்துவிட்டதாகக் கருதுபவர்களே இங்கு ஏராளம். இன்பங்களையும், துன்பங்களையும், மரியாதையையும், அவமரியாதையையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.