எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 4 நவம்பர், 2016

வாழ்க்கையை மாற்றிய புத்தகம்!!!


ஏழைத் தம்பதிகளின் மகனாக, ஒரு குடிசையில் அவன் பிறந்தான். 9 வயதாக இருக்கும்போது அவன் தாய்  இறந்தார். அவர் தந்தை வேறொரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். ஆனால் மற்ற சித்திகள் போல இல்லை அந்த பெண். அவனிடம் மிகவும் அன்பாக இருந்தாள். அவனை நன்றாக படிக்க ஆர்வமூட்டினாள்.

இந்த நிலையில் அவனுக்கு, அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனின் வரலாறு பற்றி வீஸ்  என்பவர் எழுதியிருந்த புத்தகத்தைப் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அந்த வரலாறு, “கிராப்போர்ட்” என்ற விவசாயிடம் இருப்பதை அறிந்து சுமார் 16 கி. மீ தொலைவில் உள்ள அவரின் இல்லம் சென்று அவரை சந்தித்தான். அவரிடமிருந்து கெஞ்சிக் கூத்தாடி அந்த புத்ததகத்தை, 'கட்டாயம் படித்து விட்டு திருப்பித் தருகிறேன்' என்று உறுதி கூறி வாங்கி வந்தான்.


வீட்டிற்கு வந்தவன், ஆசை ஆசையாய் ஆர்வம் மினு மினுக்க அடுப்பிலிருந்து வரும் மெல்லிய சுவாலையின் ஒளியில், ஒரு ராத்திரியில் அந்த புத்தகத்தை கிட்டத்தட்ட படித்து முடித்து விட்டான். புத்தகத்தை பாதுகாப்பாய் இருப்பதற்காக, வீட்டில் கூரைக்கு அருகில் உள்ள சுவரில் செருகி வைத்திருந்தான். 

அன்றிரவு மழையும், காற்றும் பின்னி எடுத்தது. கூரை காற்றில் பஞ்சுப்பொதியாய் பிய்ந்து பறந்து விட்டது. சுவரில் இருந்த புத்தகம் நனைந்தும், கிழிந்தும் போனது. காலையில் புத்தகத்தைப் பார்த்தவன் பதைபதைத்துப் போனான். அவனது வருத்தத்துக்கு அளவே இல்லை.

ஒரே கவலைதான் அவனுக்கு 'எப்படி அந்த விவசாயியைத் சந்தித்து பதில் சொல்வது?' என்றும் பயம்தான் நெஞ்சம் முழுவதும் விரவி நின்றது. நனைந்த புத்தகத்தை மறுநாள் காலை வெயிலில் உலர வைத்தான். அந்த பயத்திலும், அச்சத்திலும் கூட, அவர் ராத்திரி படிக்காமல் விடுபட்டுப் போன சில பக்கங்களையும் படித்து முடித்தான். பின் கிழிந்த புத்தகத்துடன் விவசாயி கிராபோர்த்திடம் சென்றான்.

நடந்ததை அவரிடம் கூறி மன்னிப்பு கோரினான். மேலும் “என்னிடம் புத்தகத்திற்கு உரித்தான விலையைத்  தருவதற்குக் கூட பணம் இல்லை. எனவே உங்கள் நிலத்தில் உழைத்து அந்த புத்தகத்தின் பணத்தை கழித்துக் கொள்கிறேன்” என்று சொல்லி விட்டு, அந்த புத்தகத்தின் மதிப்பான 75 சென்ட்டுக்கு மூன்று நாள் விவசாயியின் நிலத்தில் உழைத்து, கடனை அடைத்தான்.

அந்த புத்தகம் படித்த பின்னர் அவனுக்கு ஒரு ஆசையும், இலட்சியமும் உண்டானது. அவை அந்த சிறுவனின் வாழ்க்கையை மட்டுமல்ல, உலகத்தையே மாற்றியது.

அந்தப் புத்தகத்தின் பெயர் “வாஷிங்டனின் வாழ்க்கை”. அந்த புத்தகத்தால் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகும் எண்ணமும், ஆசையும் அவருக்கு வந்தது. அவரின் கனவும் நனவாகி, இரு முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, குடியரசுத் தலைவர் பதவியை வகித்த ஆபிரஹாம் லிங்கன் வாழ்வில் நடந்த சம்பவம் இது.


இயற்கையில் மனிதம் உருவானது கருப்பினமாகத்தான். ஆனால், சிவப்பினம் உயர்ந்தது என்று நினைக்கின்ற காலம் ஒன்று இருந்தது. கருப்பானவரை தரம் தாழ்ந்தவராய்ப் பார்க்கும் சமுதாயம் இருந்தது. அப்படிப்பட்ட எண்ணம் கொண்ட அமெரிக்காவில் பிறந்த கறுப்பினத் தலைவன் ஆபிரஹாம் லிங்கன்.